மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு (video)
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30.01.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 75 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
75 ஆவது நினைவு தினம்
இதன்போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன், "ரகுபதி ராகவ ராஜாராம்" பாடல் பாடி மரியாதை செலுத்தப்பட்டது.
இதன்போது காந்திசேவா சங்கத்தின் தலைவரினால் காந்தி தொடர்பான சிறப்புரையும் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் வெளியிடப்பட்டதுடன் முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பிரதித் தூதர் ராம் மகேஷ், வவுனியாப் பல்கலைக்கழக வேந்தர் சு.மோகனதாஸ், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், காந்தி சேவா சங்கத்தினர்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி-கஜிந்தன்,தீபன்




போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
