யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள்
யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் இந்து மக்களால் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
சைவ சம்பிரதாயத்தின் அஷ்ட விரதங்களுள் பிரதானமான இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும்.
அந்தவகையில், இன்றைய தினம், இலங்கையில் உள்ள பல சிவாலயங்களில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
பூஜை வழிபாடுகள்
மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விநாயகர் வழிபாட்டுடன் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
குறித்த பூஜை வழிபாடுகளில் இன்றைய தினம்15.02.2026 சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்கள் தமது கரங்களால் சிவனுக்கு பூவும் நீர் ஊற்றி நிவர்த்தியை நிறைவு செய்தனர்.
தொடர்ச்சியாக ஆறு சாம காலபூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

மஹா சிவராத்திரி 2026 நேரலை
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan