யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிசேகம்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிசேகம் பங்குனி உத்தர நாளில் இடம்பெறவுள்ளது.
கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் எதிர்வரும் 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளதுடன் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 ஆம் திகதி மாலை 2.00 மணி வரை அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்த முடியும்.
இதேவேளை பங்குனித்திங்கள் 12ம் நாள் (25.03.2014) சபரிவாசமேத துர்க்காதேவிக்கு சாந்தி விழா நடைபெறவுள்ளது.
தமிழ் கலாசார முறை
அந்நாளில் காலை 6.00 மணி தொடக்கம் 7.10 மணி வரை இராஜகோபுர கும்பாபிசேகமும் காலை 9.25 மணி தொடக்கம் 10.33 மணி வரை மூலாலய கும்பாபிசேகமும் நடைபெறவுள்ளது.
இத்துடன் துர்க்கா தேவியின் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தவர்களுடன் தமிழ் கலாசார முறைப்படி வருகை தந்து வழிபாட்டில் பங்குபற்றுமாறு ஆலய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுதல் விடுத்துள்ளார்.