அமெரிக்காவின் அலாஸ்காவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்..
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததுடன் இந்த நிலநடுக்கம் அலாஸ்கா வின் யாகுடாட், ஜூனாவ் ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam