தமிழக கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக கடற்றொழிலாளர்கள், 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, இன்றைய தினம் (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக நுழைந்த தமிழக கடற்றொழிலாளர்கள்
இரு வேறு சந்தர்ப்பங்களில், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து புறப்பட்ட 11 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்கள்.
இவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 4 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள், நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களையும் இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் முந்தைய வழக்கு விசாரணையில் உத்தரவிட்டிருந்தார்.
இதே வேளை, அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அரச உடமையாக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் இந்திய காங்கிரஸ் |



