கனடாவில் மாயமான 3 வயது சிறுமி: அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார் (PHOTOS)
கனடாவில் மூன்று வயது சிறுமி மாயமான விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ பொலிஸார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்ராறியோவின் பாரி பகுதியில் மூன்று வயதான Arabella Vienneau எனும் சிறுமி திடீரென காணாமல்போயுள்ளார்.
Tunbridge சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் சிறுமி கடைசியாக அடையாளம் காணப்பட்டதாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி தொடர்பில் பொலிஸார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,சிறுமியின் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.
3 அடி உயரம் கொண்ட சிறுமி, சுமார் 30 முதல் 40 lbs எடை இருப்பார் எனவும், அவருக்கு பச்சை நிற கண்கள்,பொன்னிற தலைமுடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை கடத்தியவர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் பாதுகாப்பு தொடர்பில் கவலை கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri