கனடாவில் புத்தாண்டு தினத்தன்று மாயமான 15 வயது சிறுமி! விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
கனடாவில் 15 வயது சிறுமியொருவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரது தாயார் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
கனடாவின் லண்டனை சேர்ந்தவர் அலெக்ஸிஸ் ஹாரீஸ் (15) புத்தாண்டு தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.
அவரை பொலிஸார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் பொதுமக்களும் அது தொடர்பில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் காலை 7 மணிக்கு தூங்கி எழுந்த போது என் மகள் வீட்டில் இருந்து மாயமானது தெரியவந்தது. அவளின் பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது என அலெக்ஸிஸின தாயார் மேஜோரி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் அலெக்ஸிஸ் காணாமல் போயிருக்கிறார், ஆனால் அப்போது குடும்பத்தாரை தொலைபேசி அல்லது சமூகவலைதளம் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்.
இருப்பினும் தற்போது எங்களை அவள் தொடர்பு கொள்ளவே இல்லை. தினமும் அவளது சமூக வலைதள பக்கத்தை பார்த்து வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.