மின்சார துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் மாஃபியா
மின்சார துறையினர் பல ஆண்டுகளாக மாஃபியா ஒன்று செயற்பட்டு வருவதாகவும் மின்சார பிரச்சினை என்பது திடீரென வந்த பிரச்சினையல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத துரதிஷ்டம் காரணமாகவே மக்கள் இருளில் இருக்க நேரிட்டுள்ளது.
மின்சார நெருக்கடி இல்லாத காலத்தில் தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பில்லியன் கணக்கில் பணம் செலவிடப்படுவது நாட்டு மக்களுக்கு தெரியாது.
நீண்டகாலமாக தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகிறது. இருந்து வந்த பிரச்சினைகள் ஒன்றாக சேர்ந்து மோசமான நிலைமைக்கு வந்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி, நிலக்கரி பிரச்சினை, பொருளாதார நெருக்கடியுடன் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
தொழிற்நுட்ப மற்றும் அரசியல் தரப்பினர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் மற்றும் நலன்புரி சேவைகளை வழங்குவது முக்கியமானது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
