ஆழ்துளை கிணற்றில் விழுந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய சிறுமி! இறுதியில் நேர்ந்த சோகம்
மத்தியப்பிரதேசம், முங்காவல்லி என்ற கிராமத்தில் கடந்த 6 ஆம் திகதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டு வாசலில் இரண்டரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.
இதனையடுத்து பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளடுனதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தேசிய மீட்புப் படையினரை வரவழைத்துள்ளனர்.
இ தனையடுத்து, தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளது.
100 அடி ஆழத்திற்கு சென்ற குழந்தை
மேலும், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்து வந்த நிலையில் முதலில் 50 அடியில் சிக்கியிருந்த குழந்தை, குழி தோண்டப்படும் இயந்திரங்களின் அதிர்வால் 100 அடி ஆழத்திற்கு சென்றுள்ளது.
இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி பொலிஸாருக்கு கடும் சவாலாக இருந்ததனையடுத்து, 55 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நேற்று குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
