பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் லெபனான் பிரதமர் நவாப் சலாம் பாரிஸில் சந்திப்பு
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலுள்ள சூழலில், லெபனான் பிரதமர் நவாப் சலாம் (Nawaf Salam) நாளை திங்கட்கிழமை பாரிஸில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானைச் சந்திக்கவுள்ளார்.
லெபனானில் போர்நிறுத்தம் முழுமையாகவும் நேர்மையாகவும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும், அந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பிரான்ஸின் ஆதரவைத் தெரிவிக்கவும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எலிசி (Elysee) ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
முக்கிய சந்திப்பு
லெபனானில் நிலைகொண்டுள்ள ஐநா அமைதிப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் எனப் பிரான்ஸ் நேற்று குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், லெபனானின் தற்போதைய நிலை மற்றும் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.