தெற்குக்கு ஒரு சட்டம் எமக்கு ஒரு சட்டமா! விடுதலைப் புலிகள் தொடர்பில் ரணிலின் கருத்துக்கு சுகாஸ் பதிலடி (video)
தென்னிலங்கைக்கு ஒரு சட்டம் வடக்கிற்கு ஒரு சட்டமா என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை, நினைவேந்தல் என்ற பெயரில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி புலிகளை கொண்டாடுபவர்களை கைது செய்யாமல் விடவும் முடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடும் போதே சுகாஸ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இலங்கையினுடைய உயர் பதவிகளில் இருந்தவர்கள் கூட இறந்தவர்களை நினைவு கூர்ந்தார்கள். வடக்கு - கிழக்கில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொலிஸார் நீதிமன்றங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்திருந்த போதும் மூதூர் நீதிமன்றத்தை தவிர வேறெந்த நீதிமன்றமும் நினைவேந்தலுக்கு தடையுத்தரவை பிறப்பித்திருக்கவில்லை.
ஆகவே, மக்கள் நீதிமன்ற கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே இறந்த தம் உறவுகளுக்கு நினைவேந்தலை மேற்கொண்டார்கள்.
இதையும் தாண்டி பொலிஸார் மக்களை கைது செய்தால் அது அரசாங்கத்தின் ஏதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தும்.
எனவே, அவ்வாறான கைதுகள் இடம்பெற்றால் அவற்றிற்கு எதிராகவும் நாம் குரல் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |