மாவீரர் தினத்திற்காக தயார்படுத்தப்படும் துயிலுமில்லங்கள்(Photos)
தமிழ் மக்களின் உரிமைப் போரின் போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் நவம்பர் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களால் நினைவு கூறப்படவுள்ளது.
மலர் வணக்கம்
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவினரால் இன்று(4) ஆரம்பிக்கப்பட்டது.

மாவீரர் நெடுங்கீரனின் தந்தை வீரசிங்கம் தலைமையில் குறித்த சிரமதான பணி இடம்பெற்ற நிலையில் சிரமதானத்தின் பின்னர் முதல் பெண் போராளி இரண்டாம் லெப் மாலதியின் சகோதரன் தொம்மை அவர்களினால் பொது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் தந்தை ராசாவினால் மலர் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது .
குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணியில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலும் இல்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (04) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மாவட்த்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது
மக்கள் என பலரும் கலந்துகொண்டு இச் சிரமாதான பணிகளை
முன்னெடுத்திருந்தனர்.








தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan