கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்
புதிய இணைப்பு
தாயகத்தின் விடுதலைக்காய் தமது உயிரை ஈந்த வீரர்களை நினவுகூர்ந்து தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27அன்று உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.
அந்தவகையில் கொண்டும் மழையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் உறவுகள் குவிந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
நவம்பர் 21 முதல் மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 27 துயிலும் இல்லங்களில் மாலை 6.05 இடம்பெறும் சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிறைவுபெறும்.
உலக நாடுகளில் இடம் பெறும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகளை இங்கே பார்வையிடலாம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
