கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகள்
தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், அது தொடர்பான விசேட கலந்துரையாடலும் கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்றன.
எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, துயிலும் இல்லப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செவ்வனே ஒருங்கிணைத்தல் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று(01.11.2026) காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு ஆரம்பக் கட்டப் பணிகளையும் கலந்தாலோசனைகளையும் தொடக்கி வைத்தார்.
விசேட கலந்துரையாடல்
அவருடன் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது, துயிலும் இல்ல வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முடுக்கிவிடுதல், எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள முதன்மை நினைவேந்தல் நிகழ்வுக்கான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.



உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri