முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு
புதிய இணைப்பு
துணுக்காய் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று(27.11.2026) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான நீ. அந்தோனிப்பிள்ளை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.

இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு - முள்ளியவளை மாவீரர் துயிலும் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(27.11.2026) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
பல்லாயிரக்கணக்கான பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
நான்கு மாவீரர்களின் தாயாரான சாமித்தம்பி வள்ளியம்மை கொடியினை ஏற்றி வைக்க இரு மாவீரரின் தாயாரான இராஜேந்திரம் பொன்ரோஸ் பொதுசுடர் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(27.11.2026) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வில், மக்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
ஆனந்தபுரம் நினைவாலயத்தில் இரண்டு மாவீரர்களின் தாயாரான யோசப் புஸ்பா, ஒரு மாவீரரின் தாயார் செல்வராசா பாக்கியம் பொதுசுடரினை ஏற்றிவைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.



வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri