மாயாஜால வித்தை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது: எம்.ஏ.சுமந்திரன் (Photos)
இலங்கையின் சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு நாட்டின் தலைவர் ஒருவர் மக்கள் புரட்சியின் மூலமாக துரத்தியடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் இதுவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்ற பின்னர், மக்கள் தமது கருத்துக்களை வாக்குகள் மூலம் தெரிவிக்கின்ற சந்தர்ப்பமாக இத்தேர்தல் நோக்கப்படுகின்றது எனவும் இதன்போது அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை - வெருகல் பிரதேச சபையில், இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தெற்கில் அதிர்வு அலை
தெற்கிலே பல அதிர்வு அலைகளை ஏற்படுத்தும் பல மாற்றங்கள் இந்த தேர்தல் மூலமாக இடம்பெறவுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.எனவே மக்களுடைய தீர்ப்பு அவர்கள் அளிக்கும் வாக்குச் சீட்டில் தான் இருக்கின்றது.
தெற்கிலே எவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டாலும், வடக்கு,கிழக்கில் தமது நிலம், தமது பிரதேச அதிகாரத்தை தாமே ஆள அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் சிறிதளவும் விலகவில்லை.
தொடர்ச்சியாக அவர்கள் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கூட வெளிப்படுத்த வேண்டும்.
சமஸ்டி தீர்வு
அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையிலே மாயாஜால வித்தை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. எமது மக்கள் கோருகின்ற சமஸ்டி தீர்வினைத் தான் நாங்கள் எமது கட்சியின் நிலைப்பாடாக கொண்டிருக்கின்றோம்.அதிலிருந்து நாம் ஒரு போதும் விலக மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் ச.குகதாசன் மற்றும் மாவட்டக்கிளை செயலாளர் க.செல்வராஜா, பொருளாளர் வெ.சுரேஸ்குமாா், வெருகல கேட்க்கிளை தலைவர் சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam

உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
