முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான மிரிஹான வீதியிலுள்ள மூன்று மாடி வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலாவ வீதியிலுள்ள வீடொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் பதிவு இலக்கத்தகடு இல்லாத கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மிரிஹான தலைமையக பொலிஸ் விசேட அதிகாரிகள் குழு வீட்டுக்குச்சென்று சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அந்த வீடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து, அயலவர்கள் அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் பரிசோதனை
இது தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு பிரதேச குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கைரேகை பதிவுப் பிரிவின் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, காரின் கதவுகள் திறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காரின் இன்ஜின் எண் மற்றும் சேஸ் எண் ஆகியவற்றை பரிசோதிக்க அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri