தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - மேலும் ஒருவர் பலி
லுனுகம்வெஹேர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
34 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காலி - அஹங்கம கொவியாபான பகுதியில் இன்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளிவராத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அண்மை காலமாக நாட்டில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் 17 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இன்று பிற்பகல், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் வைத்து ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.