சீன உரத்தில் மற்றுமொரு ஆபத்தான பொருள்? வெளிவந்த தகவல் - செய்திகளின் தொகுப்பு
வெளிநாட்டிலிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்யும் போது, அதில் நுண்ணுயிர்கள் மட்டுமன்றி, ஆபத்தை ஏற்படுத்தும் கன உலோகங்கள் இருப்பது குறித்தும் பரிசோதனை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த வகையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த கரிம உரங்களிலும் அதிகளவு கன உலோகங்கள் இருக்கலாம் என சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே (Hemantha Vithanage) சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிரச்சினை காரணமாக கரிம உரங்களின் இறக்குமதியைத் தடுக்க முடியாவிட்டால், அது பல சிக்கல்களை உருவாக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,