மோசமான கட்டத்தில் இலங்கை! சிவப்பு வலயம் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் கோவிட் பரவல் பட்டியலில் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேகமாக டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க கோவிட் செயலணிக்கூட்டத்தில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், இலங்கை இன்னமும் கோவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் நாடுகளின் பட்டியலில் பிரதான இடத்தில் உள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலும் கொவிட் வைரஸ் பரவல் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri