அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நிறைவு: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து, எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான விலக்குகளை தங்களுக்குச் சாதகமாகப் பெற்றுள்ளதாகத் தெஹ்ரான் அறிவித்துள்ளது.
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்
இதனால், உலக சந்தையில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தணிந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை
இதன் விளைவாக, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை பேரலுக்கு 1.68 டொலர்கள், அதாவது 2.09 சதவீதம் குறைந்து 78.89 டொலராக வர்த்தகமானது.
முன்னதாக, பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் ஏற்பட்ட இழுபறி, ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படும் என்ற ஜனாதிபதி டிரம்பின் எச்சரிக்கை மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக ஈரான் விடுத்த அறிவிப்பு போன்ற காரணங்களால் எண்ணெய் விலை 82.30 டொலராக உயர்ந்திருந்தது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த சுமுகமான இராஜதந்திர நகர்வு, எதிர்காலத்தில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்படலாம் என்ற நம்பிக்கையை உலக சந்தையில் ஏற்படுத்தியுள்ளதாக புதுடெல்லியைச் சேர்ந்த 'எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்' நிறுவனத்தின் நிறுவனர் சுகந்தா சச்தேவா தெரிவித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri