ராஜிவ் கொலையை திட்டமிட்ட விடுதலைப் புலிகள் உயிருடன் இல்லை! முழுமையாக பதிவு செய்யப்படாத பேரறிவாளனின் தகவல்கள்
ராஜிவ் காந்தி கொலையை திட்டமிட்ட விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே தற்போது உயிருடன் இல்லை என, ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் பகவான் சிங் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மன்னிப்பு சரியான முடிவாக இருக்கலாம்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொலையில் பலியான ராஜீவ் காந்தி குடும்பத்தினர் கூட, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொலை வழக்கில் கைதானவர்கள் யாருக்கும் அந்த சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரியாது என்பது புலன்விசாரணையில் வெளியானது. அதனால், அவர்களை விடுவித்துள்ளது என்பது, நம் நீதிமன்றத்தின் தன்மையை உணர்த்துகிறது.
இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு பெரிய வலி ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அதற்காக எத்தனை ஆண்டுகள் தண்டனை தந்தாலும், அது ஈடாகாது, மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும் என தெரிவித்தார்.
சிபிஐ அதிகாரியின் தகவல்
மேலும், ''குற்றவாளிகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், தனது குறிப்பில், பேரறிவாளன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றார். அதனால், இந்த வழக்கும், அதன் விசாரணையிலும் பல ஓட்டைகள் உள்ளன.
அத்துடன், அதனைப் பற்றி விசாரிக்க தொடங்கபட்ட விசாரணை ஆணையமும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும் குரல் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
