யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புதையலை தேடி அகழ்வு பணி (Video)
புதிய இணைப்பு
இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ மீட்கப்படவில்லை.
இந்த அகழ்வுப் பணி காலை 9.30 மணிமுதல் மதியம் 2 மணி வரை இடம்பெற்றது. இதன்போது தோண்ட
தோண்ட கல்லே வந்துள்ளது. இந்நிலையில் 2 மணியுடன் அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இடம்பெற்றது.
முதலாம் இணைப்பு
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத அகழ்வு பணி
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இன்று முற்பகல் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
