2009இல் விடுதலைப் புலிகளின் வெற்றியை தடுத்த இரகசியங்களை அம்பலப்படுத்தும் விமல்
விடுதலைப் புலிகளுக்கு 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வந்த ஆயுதக்கப்பல்கள் மற்றும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்கள் இலங்கை கடற்படையால் அழிக்கப்படவில்லை என்றால் விடுதலைப் புலிகளின் உக்கிர தாக்குதலுக்கு இலங்கை தரைப்படைக்கு முகம் கொடுக்க முடியாமல் போயிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நவீன ஆயுதங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆயுதக் கப்பல்களில் இருந்த நவீன ஆயுதங்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு புலிகளின் கைகளுக்கு கிடைத்திருந்தால் இறுதி போர் எமக்கு சாதகமாக இருந்திருக்குமா?
இறுதிப் போரில் கடற்படையின் பங்கே போரின் வெற்றியை எம்மால் அனுபவிக்கக் கைகொடுத்தது. இன்று போரில் முன்னிலை வகித்த உயர் படைவீரர்கள் ஏதோ ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றனர். இந்த செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தேவைக்காக செய்யப்படுகிறது.
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகே தென்ன கைது செய்யப்பட்டது அதன் ஒரு பிரதிபலனாக இருக்கலாம். நிஷாந்த உலுகே தென்ன புலனாய்வு பிரிலும் இருந்துள்ளார். அதேபோல இராணுவ அதிகாரிகள் கைதுகளும் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
