அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச அமைப்பிடம் முறைப்பாடு செய்த நாடு
அமெரிக்காவின் தமது நாட்டின் மீது விதித்துள்ள 50 வீத மேலதிக வரிக்கு எதிராக பிரேசில், உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல் என்று அந்த நாடு, தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தளம்பல்களை குறைக்கும் முகமாக, மேலதிக வரி விதிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவின் அமைதி
இதனடிப்படையில், அவர் பிரேசிலுக்கும் இந்தியாவுக்கும் 50 வீத வரியை அறிவித்திருக்கிறார். எனினும், இந்தியா இந்த விடயத்தில் அமைதியான எதிர்ப்பைக் காட்டி வருகிறது.
அத்துடன், தமது தேசிய நலன்களுக்காக தொடர்ந்தும் செயற்படப்போவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை மையப்படுத்தியே தமது நாடு மீது அமெரிக்கா வரியை விதிப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவும் கொள்வனவுகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



