மதம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு இதுவே! தையிட்டியில் நடப்பது என்ன..Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறானதொரு பௌத்த மயமாக்கல் தொடர்பில் சிந்தித்ததும் கிடையாது, செயற்பட்டதும் கிடையாது. அவர்கள் ஒரு மத சார்பற்ற கோட்பாட்டில் தான் இருந்தார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மூத்த துணைத் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிங்கள தேசத்தினுடைய நீண்ட கால நிகழ்ச்சி நிரலே தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. தற்போது தீவிரமாக, வெளிப்படையாக அரச ஆதரவோடு, அரச நிதியோடு, பங்களிப்போடு இராணுவ மயமாக்கப்பட்டு பௌத்த மயமாக்கல் அல்லது பௌத்த விகாரைகள் அமைத்தல் என்பது வடக்கு- கிழக்கிலே தமிழர் பகுதிகளிலே தொல்லியல் என்ற கோட்பாட்டுக்குள் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் தையிட்டியில் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுந்த பாரிய பிரச்சினைகள் குறித்தும் அவர் விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,