தமிழீழ விடுதலைப் புலிகளால் அடைய முடியாத இலக்கு! கொழும்பில் இருந்து எழுப்பப்படும் ஈழம் என்ற கோசம் - சரத் வீரசேகர காட்டம்
கொழும்பில் வாழ்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈழம் என்ற கோசத்தினை எழுப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளால் அடையமுடியாத இலக்கினை தமிழ் டயஸ்போறா அமைப்பினர் அடைவதற்கு முயற்சிக்கின்றனர். மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு எதிராக கூட்டுச் சதியினை தமிழ் டயஸ்போறாக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
தெற்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர், ஆனால் கொழும்பில் வாழ்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈழம் என்ற கோசத்தினை எழுப்புகின்றனர்.
கனடாவிற்கும் குற்ற உணர்வு இருக்கின்றது
கனடாவில் குடித்தொகை குறைந்து வருவதனால் அங்கு சென்றுள்ள தமிழர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம். அரசியல் இலாபங்களை அடைவதற்காக அப்பாவி மக்களை படுகொலை செய்வதே பயங்கரவாதம். ஆனால் போரை நாங்கள் நியாயப்படுத்த முடியாது. ஆனால் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தமுடியும்.
கனடாவில் அரசியல் ரீதியிலான விடயம் இருக்கின்றது. தமிழ் இனப்படுகொலையை கொண்டாடும் நோக்கில் கனேடிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் கனேடிய தமிழர்கள் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கனடாவில் காணமல் போன ஆதிவாசிகள் படுகொலை செய்யப்பட்ட விடயத்தை ஏன் தமிழர்கள் கதைக்கவில்லை. கனடாவிற்கும் குற்ற உணர்வு இருக்கின்றது. ஆனால் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு போதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
