விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் வழக்கு மே மாதத்திற்கு திகதியிடப்பட்டது (photos)
காணாமல் ஆக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய வழக்கு மீண்டும் மே மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக சரணடைந்த குடும்ப அங்கத்தவர்கள் சார்பில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இராணுவம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி
இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கியிருந்தது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதில் மன்று திருப்தியடைந்தது.
அத்துடன் நேற்றைய தினம் இராணுவம் சார்பாக சட்டத்தரணி ஒருவரே நீதிமன்றத்திற்கு சமூகமாகியிருந்ததுடன், வேறு எவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அத்தகைய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதுடன், அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை நீதிமன்றில் விளக்கமளிக்குமாறும் நேற்றைய தினம் வழக்கு திகதியிடப்பட்டது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
