விடுதலைப் புலிகளின் அமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயம்
2021ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் இலங்கையில் பயங்கரவாதச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்ற போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மறுசீரமைக்கப்படுகின்றமையால் இன்னும் அச்சுறுத்தல் உள்ளதாக இலங்கை அரசாங்கம் கருதுகிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முயற்சி
இதன் காரணமாக பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் எழுச்சி இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் நீண்டகால செயற்பாடுகள் இலங்கையிலும் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என்று இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்தநிலையில், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்து குவாட் நாடுகளான இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா என்பவற்றுடனும் ஒரே எண்ணத்தை கொண்ட பங்காளிகளுடனும் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
முழுமையாக அறிக்கையை பார்வையிட (Click Here)