கர்ப்பம் தரித்த சிங்கள பெண் - தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை..!
முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பது தொடர்பான ஆதாரம் உலகத்தில் எல்லா இடத்திலும் உள்ள நிலையில், அநுர அரசாங்கத்தினர் தற்போது கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளன என கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் தொடர்பில் பல கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட நேரு குணரட்னம், யுத்தக்காலத்தில் நடந்த சம்பவமொன்றையும் நினைவுக்கூர்ந்தார்.
“அதாவது, யுத்தக்காலத்தில் சிங்கள போர் வீரர்கள் கைது செய்த நிலையில் அவர்களை சந்திப்பதற்காக அவர்களின் குடும்பங்களை சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் அனுமதித்துள்ளனர்.
தமிழர் தேசத்தில் குடும்பத்தினர் ஒருவாரம் காலம் தங்கிவிட்டுச்சென்றுள்ளனர்.
அப்போது தனது கணவனுடன் இருந்த பெண் கர்ப்பமடைகிறாள், அதனால் தனது ஊரில் மக்களால் வசைகளுக்குள்ளாகிறார்.
மிக மோசமான அவமானங்களுக்குள்ளான பெண் பிறகு தமிழ் தேசிய தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்” என குறிப்பிட்டார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..
