விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதாக உறுதியாகவில்லை! வைகோ புதிய தகவல்
தமழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழீழத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
நெடுமாறனின் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை
தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.
என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை.
ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
