விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! பழ.நெடுமாறனை விசாரிக்க களமிறங்கியுள்ள தமிழ்நாடு கியூ பிரிவு
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் கூறிய நிலையில் அவரை விசாரிக்க மாநில உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
உளவு பிரிவினர் விசாரணை
மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டிருந்தது.
எனினும் பிரபாகரன் தொடர்பான நெடுமாறன் கூறியதை ஆராய்ந்து வரும் இந்திய மாநில கியூ பிரிவு பொலிஸார் நெடுமாறனின் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் புலனாய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
