விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்பத்தினரின் உருக்கமான கோரிக்கை நிராகரிப்பு! (Video)
இந்தியா, இலங்கையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தப் பார்க்கின்றார்கள். அதற்கு ஒரு முன்னோட்டமாக தான் தற்போது பழ.நெடுமாறன் விடுத்த அறிவிப்பை நான் பார்க்கின்றேன் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், அவர் வருவாரா இல்லையா என்பது. தமிழ் மக்களுக்கு அவர் உள்மனதில் தெரியும் என்ன அதற்கான விடை என்பது.
நீண்ட காலம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பயணித்தவர் என்ற வகையில் பழ.நெடுமாறன் ஐயாவுக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கும்.
இந்த அறிக்கையின் மூலம் தெளிவுப்படுத்தப்படுவது என்னவென்றால், விடுதலைப் புலிகள் ஒருபோதும் இலங்கையில், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் காலூன்றுவதை விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக இல்லை. அவர்களுடைய வரலாறுகளை நோக்கி பார்த்தீர்கள் என்றால் தெரியும். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் சீனாவை பகைக்க போவதும் இல்லை, சீனாவை பகைக்கப் போவதுமில்லை என்று அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உறவினர்கள் கூட சில கோரிக்கைகள் விடுத்ததாகவும், அவை நிராகரிக்கப்பட்டதாகவும் ஆய்வாளர் அரூஸ் விபரிக்கின்றார்.