‘‘விடுதலைப்புலிகளின் தலைவர் வருவார் என்ற போது உயிரிழந்த செய்தியை தேடி அலைய தேவையில்லை’’ சிறீதரன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வருவார் என்ற போது உயிரிழந்த செய்தியை தேடி அலைய வேண்டிய தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும், நலமுடனும் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' எனவும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இலங்கை இராணுவம் மறுப்பு
மேலும், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இது தொடர்பில் இணைய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் தேசிய தலைவரின் வருகைக்காக உலக வாழ் தமிழ் மக்கள் காத்திருக்கின்றோம்.அவரின் வருகை பழ.நெடுமாறனின் கருத்துப்போன்று உண்மையாக வேண்டும்.
உலகில் சிறந்த இனம்
அவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் வந்தால் உலகில் சிறந்த இனமாக தமிழினம் அடையாளப்படுத்தப்படும். அதற்காக காத்திருக்கின்றோம்.
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வருவார் என்ற போது அவரின் மரணம் தொடர்பான செய்திகளை ஆராய வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
