விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் வேறுபாடான நிலை! பிரதமர் வெளியிடும் தகவல் : செய்திகளின் தொகுப்பு
விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். எனவே, அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் அகிம்சை வழியிலும், ஆயுத வன்முறை வழியிலும் போரிட்ட தலைவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு.
அதனால் அவர்கள் உயிரிழந்த பின்னரும் தங்கள் மனங்களில் உயிர் வாழ்கின்றார்கள் என்று சிலர் கருதுகின்றார்கள். ஆனால், விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் அது சற்று வேறுபாடாக இருக்கின்றது.
இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் போரிட்டு மரணித்த அவரை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
