‘‘விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை'' - யுத்தத்தின் இறுதி நாள் வரை போராடிய வீரர் தகவல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை இராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் சண்டையிட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழ இறுதி போரில் கடும் சண்டையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவர் இறந்து கிடப்பது போன்ற படமும் வெளியானது. இருப்பினும் பிரபாகரன் சாகவில்லை. அவர் உயிருடன் இருக்கின்றார் என்று தமிழ் தேசிய தலைவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தனர்.
பரபரப்பான தகவல்
இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
இதனிடையே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப் போரில் இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளி தகவல்
இந்த நிலையில் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான அரவிந்தன், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் நேரடியாகவே சண்டையிட்ட இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.