இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நடந்தவை : குடும்பத்தார் எடுத்துள்ள தீர்மானம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்(Velupillai Prabhakaran), அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வீர காவியம் ஆனார்கள் என்பதை நூறு வீதம் நாங்கள் நம்புகின்றோம் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அண்ணனுடைய மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரலாற்றையே மாற்றிப் போடும் நிகழ்வுகள் தற்போது நடைபெற ஆரம்பித்துள்ளன. யாரோ ஒரு பெண் இங்கு வந்து நான்தான் துவாரகா என அறிவிக்கின்றார். இது போன்ற வரலாற்றை மாற்றியமைக்கும் நிகழ்வுகள் தற்பொது ஆரம்பிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |