குறைந்த வருமானம் கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தொடர்பில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்றோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்துத் துறைகள் தொடர்பிலும் அவதானம்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விசேட தேவையுடைய சமூகத்திற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் அவை திருப்திகரமானதாக இல்லை.
அதனால் சட்டத் திருத்தங்களின் போது அதற்குரிய சட்டங்களையும் தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிக்கவும் எதிர்பார்கிறோம்.
விசேட தேவை உடையோரைப் போன்றே கவனம் செலுத்தப்படாத பல பிரிவினர் உள்ளனர். இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் நாம் முதலில் கவனம் செலுத்தினோம்.
அதேபோல் ஏனைய சமூகங்கள் குறித்தும் கவனம் செலுத்தினோம். அனைத்து துறைகள் குறித்தும் அவதானம் செலுத்த ஐந்து வருடங்களாவது தேவைப்படும்.
அதற்காக வெளிநாட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுகொள்ளவும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |