அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தில் போலியான தகவல்களை முன்வைத்து கொடுப்பனவு பெற்றவர்களிடம் இருந்து வழங்கப்பட்ட பணத் தொகை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளிகளில் தவறான தகவல்களை அளித்து பயனடைந்த 7000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெறப்பட்ட பணத்தை திரும்பப் பெறவும், தவறான தகவல்களை வழங்குவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
சரியான தகவலை வழங்குவதில் பயனாளிக்கே பொறுப்பு உள்ளது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தகவலை உறுதிப்படுத்துவது மாத்திரமே.
அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபணைகளின் விசாரணையின் போது அடையாளம் காணப்பட்ட அந்த குடும்பங்கள் ஏற்கனவே பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 12 லட்சம் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளன.
மேலும், இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஏற்கனவே 200,000 அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
