விபத்தில் சிக்கிய இளம் காதலர்கள் - காதலி பலி
பின்னவல பொலிஸ் பிரிவில் ஹட்டன்-பலாங்கொடை வீதியில் நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடயில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது காதலியும் பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காதலி பலி
எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி காதலி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அரநாயக்கவைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri