கோர விபத்தில் உயிரிழந்த காதலர்கள் தொடர்பில் வெளியான தகவல்
தென்னிலங்கையில் சம்பவித்த கோர விபத்தில் உயிரிழந்த இளம் காதலர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மாத்தறையில் வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் பேருந்துடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து தெவிநுவர நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர்கள், மாத்தறையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் பின்புற சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோர விபத்து
விபத்தில் அலஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதான விக்ரமசிங்க கமச்சிகே, பொல்ஹேன காசிவத்தபுரத்தைச் சேர்ந்த 23 வயதான எதிரிசிங்க எமெல்ஷி ஹவிஸ்கா டயஸ் என்ற யுவதியும் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காதலன் சதொச கிளையில் காசாளராக பணியாற்றி வரும் நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
