இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 48 பலஸ்தீனியர்கள் பலி
பாலஸ்தீன வடக்கு காசாவில் நேற்று இரவு முழுவதும், இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 48 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜபாலியா நகரத்திலும், ஏதிலிகள் முகாமிலும் உள்ள பல வீடுகள் தாக்கப்பட்டதில் 22 சிறுவர்களும் 15 பெண்களும் மரணமானதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பலஸ்தீனியர்கள் பலி
எனினும், குறித்த தகவல்களை ஆராய்ந்து வருவதாக, இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, பாலஸ்தீன ஆயுதக் குழு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஜபாலியா மற்றும் அண்டை பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு, இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
இதற்கிடையில் காசாவிற்கு உணவு மறுப்பதே இஸ்ரேலின் 'போர் ஆயுதம் என்று ஐக்கிய நாடுகள் பாலஸ்தீன எதிலிகள் அமைப்பின் தலைவர் டொம் பிளெட்சர் தெரிவித்துள்ளார் காசா மீதான 10 வார முற்றுகையை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அடம் போஹ்லர் ஆகியோர் சாத்தியமான போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் குறித்த புதிய பேச்சுவார்த்தைகளுக்காக, தாம் கட்டாருக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர்.
அதேநேரம், ஹமாஸ் இன்னும் பிடித்து வைத்திருக்கும் 58 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த வாரம் காசாவில் தனது இராணுவத் தாக்குதலை விரிவுபடுத்துவதாக,இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
