காதல் விவகாரத்தில் மாணவன் மீது கடும் தாக்குதல், கத்திக் குத்து
கண்டியில் பாடசாலை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவரை சிலர் கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிலிமத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று மதியம் பிலிமத்தலாவையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து கும்பல் ஒன்றின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் மீது தாக்குதல்
காயமடைந்த மாணவனை சம்பவ இடத்திலிருந்தவர்களால் பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மாணவனுக்கு அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒரே பாடசாலையில் பாடசாலைக் கல்வியை முடித்த மூன்று மாணவர்கள் எனவும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இரு சகோதரர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்து்ளளனர்.
சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
