ஆசிரியர் மீது கத்திக்குத்து: பொலிஸ் விசாரணையில் வெளியான காரணம்
பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளியான காரணம்
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியரிடம் இருந்து கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விரு ஆசிரியர்களும் இருவேறு பாடசாலைகளில் பணியாற்றும் நண்பர்கள் எனவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சந்தேகநபர் நேற்று (18) நள்ளிரவு மற்றைய ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விவகாரமே இந்த மோதலுக்கு காரணம் என்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்