சூதாட்ட மோசடி குறித்து லொத்தர் சபை எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெறும் சூதாட்ட மோசடி சம்பவமொன்று தொடர்பில் தேசிய லொத்தர் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புள்ளடியிடுதல் அல்லது சதுரம் வெட்டுதல் என்ற பெயரில் நாடாளாவிய ரீதியில் சட்டவிரோதமாகச் செயல்படும் சூதாட்டம் ஒன்று தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூதாட்டத்தில், தேசிய லொத்தர்சபை லொத்தர் சீட்டு வெற்றியாளர்களின் இலக்கங்களை கணித்து, அதன் கடைசி இரண்டு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, சில நபர்கள் இச்சூதாட்டத்தை நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத லொத்தர் சூதாட்டங்கள்
சதுரம் வெட்டுதல் அல்லது புள்ளடியிடுதல் என்ற பெயரில் நடாத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை சட்டவிரோதமாக பணம் திரட்டும் இச்சூதாட்டத்தில் பங்கேற்காதவாறு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய லொத்தர் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இச்சூதாட்டத்தில் மக்கள் பெரிய அளவில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டவிரோத லொத்தர் சூதாட்டங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சட்டவிரோத சூதாட்டங்களில் பங்கேற்பது குற்றமாகும்.
தேசிய லொத்தர் சபை அல்லது அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் மூலம் மட்டுமே சட்டப்படி லொத்தர் சீட்டிலுப்பு அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |