புதிய பரிமாணத்துக்கு மாற்றம் செய்யபடபோகும் லொத்தர் சபை - அஜித் குணரட்ண
அபிவிருத்தி லொத்தர் சபையானது விரைவில் புதிய பரிமாணத்துக்கு மாற்றம் செய்யப்படும் என அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய அஜித் குணரட்ண நாரகல தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற அபிவிருத்தி லொத்தர் சபையின் வடமாகாண விற்பனை முகவர்களுக்கான ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அபிவிருத்தி லொத்தர் சபையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்பனை முகவர்களை ஒவ்வொரு வருடமும் சந்திப்பு இடம்பெறும்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக அவ்வாறான ஒரு சந்திப்பு இடம்பெறவில்லை. இவ்வாறான ஒன்று கூடலுக்கு அரசியல்வாதிகளையும் அழைப்பது வழமை.
அதனடிப்படையில் இன்றைய ஒன்று கூடலுக்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேச பிரதேச சபை தவிசாளர்களையும் அழைத்திருக்கிறோம்.
எமது லொத்தர் சபையின் முகவர்களைப் பிரதேச சபையினருடன் இணைந்து செயற்படும் முகமாகவே நாங்கள் பிரதேச சபை தவிசாளர் களையும் இங்கு அழைத்திருக்கின்றோம். ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது அந்தந்த பிரதேச சபையினருடனேயே தொடர்பு கொள்ள வேண்டியநிலை காணப்படுகின்றது.
எந்த வித அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற தலைவர்களை அழைத்திருந்தோம்.
கடந்த 39 வருடமாக லொத்தர் சபையானது பல்வேறு சேவைகளை மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றது எனவே விரைவில் அபிவிருத்தி லொத்தர் சபையானது புதிய பரிமாணத்திற்கு அதாவது நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது .
அவ்வாறு புதிய பரிணாமம் பெறும் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை
இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்” என மேலும் தெரிவித்தார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
