தரமற்ற நிலக்கரியால் 8497 மில்லியன் ரூபா நட்டம் - சஜித் சாடல்
தற்போதைய அரசு தென்னாபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டுக்கு 8,497 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தரவுகள்
நேற்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து மேலும் தெரிவிக்கையில், "ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியுடன் ஒப்பிடும்போது, தென்னாபிரிக்க நிலக்கரி தரம் குறைந்தது என்பதை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

எதிர்பார்க்கப்படும் 5900 - 6200 மட்டத்தை தென்னாபிரிக்க நிலக்கரி எட்டத் தவறிவிட்டது.
ரஷ்ய நிலக்கரி ஒரு கிலோவாட் மணிக்கு 0.46 கிலோ சாம்பலை உருவாக்கும் நிலையில், தென்னாபிரிக்க நிலக்கரி 0.93 கிலோ சாம்பலை உருவாக்குகின்றது.
இது 102 வீத அதிகரிப்பாகும். தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் லக்விஜய (நுரைச்சோலை) மின் உற்பத்தி நிலையத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அங்கு 300 மெகாவாட் முழுமையான மின் உற்பத்தியை எட்ட முடியாமல் உள்ளது. அதிக சாம்பல் மற்றும் வெப்பநிலை காரணமாக கொதிகலன்கள் மற்றும் ஏனைய இயந்திரப் பாகங்கள் விரைவாகத் தேய்மானமடைகின்றன.
தரம் குறைந்த இறக்குமதிகள்
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 9 கப்பல் நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை மறைக்கவே, அரசு தற்போது அவசரமாக மீண்டும் 5 நிலக்கரி கப்பல்களை (தலா 60,000 தொன்) கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.

இது தரமின்மையை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகும். நாட்டுக்கு வருடத்துக்கு 6 நிலக்கரி கப்பல்கள் தேவைப்படும் நிலையில், இவ்வாறான தரம் குறைந்த இறக்குமதிகள் மூலம் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் இதனை மறுத்தாலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தரவுகள் ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. இதற்கு அரசு நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam