மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி பள்ளத்தில் விழுந்து விபத்து
பொகவந்தலாவயில் பைனஸ் மரங்களை ஏற்றிச் சென்ற ஒரு லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(11) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பலாங்கொடை, மாரதென்ன பகுதியிலிருந்து பைனஸ் மரங்களை ஏற்றி சென்ற குறித்த லொறியானது பொகவந்தலாவ வழியாக கண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து நிகழ்ந்தபோது, லொறியில் இருந்த ஓட்டுநரும் உதவியாளரும் திடீரென குதித்து உயிர் தப்பியதாக பொலிஸ் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் லொறி பலத்த சேதமடைந்ததுடன், பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan