தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லொறி: உயிர் தப்பிய சாரதி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உரமூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, பாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கஹதுடுவ நுழைவாயிலின் 6 கிலோ மீற்றர் மைல்கல்லுக்கு அருகில், நேற்று (25) மாலை மேற்படி விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு வேலியின் மீது மோதி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்நிலையில், சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும், வாகனத்தின் சாரதி மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஓய்வின்றி வாகனம் செலுத்தி கொண்டிருந்ததும், அதன் காரணமாக வாகனம் செலுத்தும் போது ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தில் கட்டுபாட்டை இழந்த லொறி விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |