நானுஓயாவில் பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து
நானுஓயா - கிளாரண்டன் தோட்டத்தில் லொறியொன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (25.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளாரண்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல வழியாக கிரிமிட்டி பகுதியை நோக்கி பயணித்த லொறி, பிரேக் செயலிழப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு - நொடியில் நடந்த பயங்கரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான பின்னணி
லொறி விபத்தில் உயிர்தப்பிய மூவர்
இந்த விபத்தினால் அருகிலிருந்த தொடர் குடியிருப்பின் ஒரு வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், லொறியின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்து நேரத்தில் லொறியில் சாரதி மற்றும் அவரது இரு உதவியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, மூவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 12 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri